கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் |

நடிகர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார். தொடர்ந்து மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அவரும் கடந்த சில வருடங்களாக படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் டி3 படத்தின் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு நிற்க அதற்கு தக என்று தலைப்பு வைத்துள்ளனர். கிரைம் கலந்த த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி. எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர்.




