திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 68வது படத்தின் அறிவிப்பு வெளியானது. பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகே அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். அது விஜய் 68ல் முன்னதாகவே நடந்துவிட்டது. இதனால், 'லியோ' படத்திற்குத் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்று விஜய் ரசிகர்கள் பலரும் கருதினார்கள்.
மேலும், ஒரு நிகழ்ச்சியில் பேசிய 'லியோ' படத் தயாரிப்பாளர் லலித்குமார் 'வாரிசு' படம் வெளிவருவதற்கு முன்பே 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்ததாகவும், ஆனால், 'வாரிசு' வெளிவரும் வரை 'லியோ' பற்றி வெளியில் எதையும் அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று 'ரெஜினா' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் 68 இயக்குனரான வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவர் பேசும் போது ரசிகர்கள் 'விஜய் 68 அப்டேட்' என சத்தமிட்டனர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, “லியோ' வந்த பிறகு கொடுக்கலாம், அப்புறம் விஜய் சாரே திட்டுவாரு. ஏன்டா, நீ போய் எல்லா இடத்துலயும் அப்டேட் கொடுக்கறன்னு கேப்பாரு. அதனால, 'லியோ' வந்த பிறகு 'தளபதி 68' அப்டேட்,” எனக் கூறினார்.
அதனால், 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளிவரும் வரை அடுத்த நான்கு மாதங்களுக்கு 'விஜய் 68' படத்தின் அப்டேட் வர வாய்ப்பில்லை.