சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரையில் கால்பதித்து நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிதா முன்னதாக அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சமூக வலைதளங்களில் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில், சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் போட்டோஷூட், மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் அனிதா ப்ரைடல் மேக்கப் விளம்பரத்துக்காக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், கண்ணை பறிக்கும் கலரில் கோட், கழுத்து நிறைய ஆபரணங்கள் போட்டிருந்தார். அதை பார்த்து பேக் ஐடி நெட்டிசன் ஒருவர் 'பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க' என்று அனிதாவை கலாய்த்துள்ளார்.
அதற்கு அனிதாவும், 'உன்ன யாரோ இப்படி சொன்னத நீ இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்கிற. சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்' என கிண்டலாகவே பதிலடி கொடுக்க அந்த பேக் ஐடி நெட்டிசன் பதில் பேச முடியாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.