சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

கடந்த 1982ம் ஆண்டில் இயக்குனர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் தனிக்காட்டு ராஜா. நடிகைகள் ஸ்ரீ தேவி, சில்க் சிமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இப்படத்தை சுரேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்தனர். அந்த காலகட்டத்தில் இப்படம் விமர்சனம் ரீதியாக வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில மாதங்களாக இந்த படம் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் வருகின்ற ஜூன் 2ம் தேதி தமிழகமெங்கும் சுமார் 50 திரையரங்குகளில் ரீ மாஸ்டர் செய்து டிஜிட்டல் முறையில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். இதுவரை இந்த படம் எந்த ஒரு தனியார் சேனலிலும் ஒளிபரப்பு ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.