வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை |

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'.படம் துவங்கும் முன்பே டீசர் எல்லாம் வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கினர். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப்படம் உருவாகி வந்தது. நிதி பிரச்னை உள்ளிட்ட பல சிக்கலால் இந்த படம் வெளியீட்டில் தாமதமாகி வந்தது. ஒருவழியாக இந்தாண்டு படம் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாம். இதையடுத்து படத்தை ஜூலை 14ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.