காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
பிரியங்கா சோப்ரா ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள ஹாலிவுட் வெப் தொடர் ‛சிட்டாடல்'. ரிச்சர்ட் மேடன் மற்றும் லெஸ்லி மான்வில் மற்றும் ஸ்டான்லி டுசி ஆகியோர் நடித்துள்ள இந்த ஸ்பை த்ரில்லர் படம் இந்தியா, இத்தாலி, பிரேசில், தென்னாப்பிரிக்கா, யு.கே மற்றும் யு.எஸ். உள்ளிட்ட உலக நாடுகளில் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது. இது யு.எஸ்.க்கு வெளியே அதிகம் பார்க்கப்பட்ட புதிய அசல் தொடர் வீடியோக்களில் இரண்டாவது இடத்தையும் மற்றும் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட அசல் தொடர்களில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தொடரின் இந்திய கதையில் சமந்தா நடித்து வருகிறார். தற்போது இந்த தொடரின் 2வது சீசன் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் மற்றும் எம்ஜிஎம் ஸ்டுடியோஸின் தலைவர் ஜெனிபர் சால்கே இதுபற்றி கூறியிருப்பதாவது: சிட்டாடல் உண்மையில் உலகளாவிய நிகழ்வு. நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் அயராத உழைப்புக்கு அதன் உலகளாவிய அறிமுக பார்வையாளர்கள் ஒரு சான்றாகும். இந்த தொடரை ஏற்றுக்கொண்ட ஏராளமான வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடர் இரண்டாவது சீசனுக்குத் திரும்பும் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம். சிட்டாடலின் புதுமையான கதை சொல்லல், கேமராவிற்கு முன்னும் பின்னும் உள்ள படைப்பாளிகளுடன் நம்பமுடியாத, உலகளாவிய ஒத்துழைப்புக்கு வழி வகுத்துள்ளது. என்கிறார்.