கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' |
கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களையும் வெற்றி படமாக்கியவர் இயக்குனர் பிரசாந்த் நீல். அதைத்தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்ருதிஹாசன் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் வரை சலார் படம் குறித்த இப்போது அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார் பிரசாந்த் நீல்.
ஆனால் இதற்கு முன்னதாக பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த படத்தின் புரமோஷன் பாதிக்க வேண்டாம் என சவால் குறித்த தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார் பிரசாந்த் நீல். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை விட சலார் படத்தின் அப்டேட் கேட்டு நச்சரித்து வந்தனர்.
இதனால் இவர்களுக்கு பதில் சொல்வதை விட தற்காலிகமாக சோசியல் மீடியாவை விட்டு வெளியேறுவதே சிறந்தது என முடிவு செய்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்து வெளியேறியுள்ளார் பிரசாந்த் நீல். இது பிரபாஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.