ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 'விஜய் 68' படத்தின் அறிவிப்பு திடீரென வெளியானது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைதற்கு முன்பே வந்த அந்த அறிவிப்பு பற்றி கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களும், 'லியோ' ரசிகர்களும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அவரது 'லியோ' படத்தை அறிவித்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“'வாரிசு' படத்தை நான்தான் ரிலீஸ் பண்ணேன். அதுக்கு முன்னாடியே நாங்க பூஜை போட்டு முடிச்சிட்டோம். டிசம்பர் 5 பூஜை போட்டோம். ஜனவரி 2 ஷுட்டிங் ஆரம்பிச்சிட்டோம். முதல் கட்ட படப்பிடிப்பையும் முடிச்சிட்டோம். அதுக்கப்புறம்தான் 'வாரிசு' ரிலீஸ் ஆச்சி. 'வாரிசு' ரிலீஸ் ஆகற வரைக்கும் நாங்க யாரும் 'லியோ' பத்தி பேசவேயில்லை. காஷ்மீர் படப்பிடிப்பை ஆரம்பிச்ச பிறகு ஐந்து நாள் டெஸ்ட் மேட்ச் மாதிரி புரமோஷன் பிளான் பண்ணி விஜய் சார்கிட்ட சொன்னோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புரமோஷன் பண்ணோம். முதல்ல பூஜை வீடியோ, அடுத்த நாள் பிளைட்டு, அடுத்து டீசர் ரிலீஸ் பண்ணது, என ஐந்து நாள் ஐந்து பண்ணோம்,” என பேசியுள்ளார்.
அதாவது, அப்போது விஜய் நடித்து வெளிவர இருந்த 'வாரிசு' படம் வெளிவரும் வரை அவர்களது 'லியோ' படம் பற்றி எதையும் வெளியிட வேண்டாம் என்ற முடிவுதான் அது. ஆனால், இப்போது 'லியோ' வெளிவருவதற்கு முன்பே விஜய் 68 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளது. 'லியோ' படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்தும் கூட நாங்கள் அது பற்றி எதுவும் வெளியிடவில்லை என்று சொல்கிறார்.
விஜய் படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் விஜய்யின் அனுமதி இல்லாமல் வெளிவராது. அவரது அனுமதி பெற்றுத்தான் விஜய் 68 அறிவிப்பையும் வெளியிட்டிருப்பார்கள். இருப்பினும் அது 'லியோ' படத்திற்கு ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தனது கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.