ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சாதனை படங்கள் உருவாகும். அந்த வரிசையில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'கெழப்பய'. இந்த படம் ஒரே காட்சியில் உருவாகி உள்ளது. படம் பற்றி அதன் இயக்குனர் யாழ் குணசேசரன் கூறியதாவது:
செக்யூரிட்டி வேலை செய்யும் 65 வயது முதியவர் தன் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தனக்கு பின்னால் வரும் ஒரு கார் தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வர, அந்த காருக்கு வழியை விடாமல் பொறுமையாக தொடர்ந்து செல்கிறார். தங்களுக்கு வழிவிட மறுக்கும் முதியவரின் செயல் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த, காரை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று பேச, முதியவர் அவர்களை எந்தவித காரணமும் இன்றி தாக்குகிறார். கோபம் அடைந்த அவர்கள் முதியவர் என்றும் பாராமல் அவரை திருப்பி தாக்குகிறார்கள்.
அப்போது அங்கே வரும் ஊர்மக்கள் அவர்களை விலக்கிவிட்டு அடிவாங்கிய முதியவர் மீது பரிதாப்படுகிறார்கள். அவரை காருக்கு வழி விட சொல்ல, அவர்களையும் முதியவர் தாக்குகிறார். கடுப்பான ஊர்மக்கள், முதியவர் அந்தக் காரை பிடிவாதமாக போகவிடாமல் அடுத்தடுத்து செய்யும் செயல், அவர்களால் புரிந்து கொள்ளமுடியாமல், அவர்கள் அனைவரும் முதியவரை கோபத்தில் திட்டி தீர்க்கிறார்கள். அப்போது அங்கே வரும் போலீஸ் முதியவரையும் மற்றவர்களையும் விசாரிக்க... முதியவர் மூலம் சில மர்மங்கள் வெளிவருகிறது.
இந்தியன் தாத்தாவின் சிந்தனையும், காந்தி தாத்தாவின் செயல்பாட்டையும் கலந்த கலவையான "கெழப்பய" திரைப்படம் ஒருமணி நேரம் ஒரே காட்சி ஒரே இடத்தில் கொஞ்சம் கூட தொய்வில்லாமல் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் திரைக்கதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற படம். முதியவர் கதாபாத்திரத்தில் கதிரேசகுமார் நடித்திருக்கிறார். அஜித்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கேபி இசை அமைத்துள்ளார். சீசன் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் வெளிவருகிறது. தியேட்டர் வெளியீடா, ஓடிடி வெளியீடா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என்றார்.