கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் அட்லீ. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நயன்தாரா, விஜய் சேதுபதி யோகிபாபு ஆகியோரும் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளனர். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து விட்ட விஜய் சேதுபதி இப்போது ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் ஜவான் படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது என தற்போது ஒரு சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நடந்தபோது அதில் கலந்து கொள்ள நடிகர் ஷாருக்கானும் வந்திருந்தார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்டவரிடம் ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்த விஜய்சேதுபதி, ஷாருக்கானுக்கும் வில்லனாக நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை பேச்சுவாக்கில் கூறியுள்ளார்.
அவரது ஆசை விக்னேஷ் சிவன் மூலமாக அங்கே வந்திருந்த ஷாருக்கானுக்கும் தெரிய வந்ததும் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று கூறி தனது படத்தில் விஜய்சேதுபதியை வில்லன் ஆக்க கிரீன் சிக்னல் கொடுத்தாராம் ஷாருக்கான். அந்த வகையில் தனது நண்பனின் விருப்பத்தை தனது திருமண தினத்தன்று நிறைவேற்றி கொடுத்து விட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.