படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | வனிதா மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த பிரதீப் ஆண்டனி |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்னாத். பல சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'லைகர்'. அப்படம் படுதோல்வி அடைந்து விஜய் தேவரகொன்டாவிற்கு மிகப் பெரும் இறக்கத்தைக் கொடுத்தது. அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்று இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் இருந்தார். சில முன்னணி நடிகர்களிடம் அவர் கதை சொல்லியும் அவர்கள் தயங்கியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் பூரி ஜெகன்னாத் அவரது இயக்கத்தில் 2019ல் வெளிவந்த 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு 'டபுள் இஸ்மார்ட்' எனப் பெயரிட்டுள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கப் போகிறார். லிங்குசாமி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'த வாரியர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் ராம் பொத்தினேனி. அப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கில் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
2019ல் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பூரிக்கு மற்ற சில முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்கத் தயங்கிய நிலையில் ராம் பொத்தினேனி முன்வந்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 'டபுள் இஸ்மார்ட்' படம் 2024ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வெளியாகும் என்றும் இப்போதே அறிவித்துள்ளார்கள்.