''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனியின் பயோபிக் படமாக மறைந்த சுஷாந்த் சிங் நடிக்க 'எம்எஸ் தோனி - த அன்டோல்டு ஸ்டோரி' ஹிந்திப் படம் 2016ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. அந்தப் படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங்கிற்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்தது. சுஷாந்த் சிங் கடந்த 2020ம் வருடம் தற்கொலை செய்து இறந்தார் என்பது ரசிகர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
தற்போது விடுமுறை நாட்கள் என்பதாலும், ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாலும் 'எம்எஸ் தோனி' படத்தை தமிழ், ஹிந்தியில் மீண்டும் ரி-ரிலீஸ் செய்துள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களும், தோனி ரசிகர்களும், சுஷாந்த் ரசிகர்களும் கடந்த சில நாட்களாக படத்திற்குத் தரும் ஆதரவு சிறப்பாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சினிமா டிஜிட்டல் வடிவத்தில் மாறிய பிறகு இம்மாதிரியான ரி-ரிலீஸ் என்பது மிகவும் குறைந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்திற்குக் கிடைத்து வரும் ஆதரவு சிறந்த படங்களை மீண்டும் வெளியிடுதற்கான ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.