நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
திருவனந்தபுரம்: புட்பால் விளையாட்டை காண சென்ற பிரபல நடிகர் மம்முகோயா(76) செல்பி எடுக்கும் நேரத்தில் மைதானத்தில் சரிந்து விழுந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று(ஏப்., 26) மாரடைப்பால் அவர் காலமானார்.
பிரபல மலையாள நடிகரான மம்முகோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை துவக்கினார். தொடர்ந்து காமெடி நடிகராக சுமார் 450 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இரண்டுமுறை மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் அவர் பிளமென்ஸ் ஆப் பாரடைஸ் என்ற பிரெஞ்சுமொழி படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.
76 வயதான மம்முகோயா மலப்புரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியை துவக்கி வைப்பதற்காக நேற்று சென்றார். வந்த இடத்தில் ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுப்பதாக அவரை சூழ்ந்தனர். அப்போது தனக்கு உடல்நிலை சவுகரியம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யூ வார்டில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஏப்., 26) அவரது உயிர் பிரிந்தது.
மம்முகோயாவின் மறைவு மலையாள திரையுலகினர் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.