‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
ஹாலிவுட் அதிரடி சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்னேகர். அதிரடி ஆக்ஷன் படத்திலும் நடித்திருக்கிறார், காமெடி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டையும் கலந்து முதன் முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். இந்த தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'புபார்' என்ற இந்த தொடரில் அர்னால்டும் அவரது மகளும் சிஐஏ ஏஜெண்டுகள், இருவரும் சேர்ந்து ஒரு ஆபரேஷனுக்காக அதிரடி ஆக்ஷனில் இறங்குகிறார்கள். அப்பா மகளாக இருந்தாலும் இருவரும் எப்போதும் எலியும், பூனையுமாக முறைத்துக் கொண்டிருப்பார்கள். இருவரும் தங்கள் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிப்பதுடன் அப்பா மகளாகவும் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி கலந்து உருவாகி வருகிறது. வருகிற 5ம் தேதி இத்தொடர் வெளியாகிறது.