ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா |
கனா காணும் காலங்கள் சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இர்பான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், பிராணிகா, அபெனேயா, பிரவீனா என இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பல நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர். எனவே, இளைஞர்களுக்கான பேவரைட் லிஸ்டில் இந்த தொடரும் கட்டாயம் இடம்பிடிக்கும் என்று சொல்லலாம். தற்போது திரைக்கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் நடிகை ப்ரீத்தி கிருஷ்ணனை ஒரு முக்கிய ரோலில் களமிறக்கியுள்ளனர். ப்ரீத்தி க்ருஷ்ணன் 'மிஸ்ட் காதல்' வலைதொடரின் மூலம் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வந்தார். பல குறும்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரது என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கனா காணும் காலங்கள் சீசன் 2 கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.