சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் | அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சு: வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட காவேரி பரூவா | தேர்தலுக்குப் பிறகுதான் 'ஜனநாயகன்': உறுதி செய்கிறதா 'கில்லி, தெறி' ரீரிலீஸ் | 'ராம் இன் லீலா' தலைப்புக்கு சென்சார் கிடைக்குமா? | ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா துலிபலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, அஷ்வின் கக்கமனு, ரகுமான், கிஷோர் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் அவர்கள் ஆரம்பித்த 'சோழர்களின் பயணம்' என்ற புரமோஷன் பயணத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா, ஜெயராம் என பலரும் பட புரொமோஷனில் பங்கேற்று வருகின்றனர். முக்கியமான ஊர்களில் மணிரத்னம் பங்கேற்கிறார்.
இன்று(ஏப்., 18) டில்லியில் நடைபெறும் நிகழ்வில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர். விமானத்தின் பின்னணியில் இவர்கள் 6 பேரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.




