அபிஷேக் பச்சன் விஷயத்தில் ஐஸ்வர்யா ராய் ஏற்படுத்திய குழப்பம் ; தெளிவுபடுத்திய நிறுவனம் | காவாலா பாடலுக்கு என் முழு பங்களிப்பை கொடுக்கவில்லை ; தமன்னா வருத்தம் | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் என்ட்ரி கொடுக்கும் சாய் ரித்து | மாற்றி மாற்றி பேசும் கோபி : கடுப்பான ரசிகர்கள் | ஆர்மி என்கிற பெயரை பயன்படுத்தியதால் அல்லு அர்ஜுன் மீது புகார் | உலக சினிமாவில் ஒரே நபர் என்கிற சாதனையை இழந்து விட்டாரே விஜய் ; ரசிகர்கள் வருத்தம் | ஜோவிகாவை நடிகையாக்க நினைக்கல - வனிதா விஜயகுமார் ஓப்பன் டாக் | மீண்டும் களமிறங்கும் சிபு சூரியன் | அன்னம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | சினிமாவில் ஓய்வை அறிவித்த '12வது பெயில்' நடிகர் விக்ராந்த் மாசே |
ஹிந்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஹூமா குரேஷி. தமிழில் ரஜினியின் காலா, அஜித்தின் வலிமை படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி படங்கள் மற்றும் வெப்சீரிஸில் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் திருமண பந்தத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரின் திருமணம் தொடர்பான கேள்விக்கு இவர் கூறுகையில், ‛‛ஹிந்தி பிரபலங்கள் பலர் திருமணம் செய்து வருவதால் எனக்கு எப்போது திருமணம் என நான் எங்கு சென்றாலும் கேள்வி கேட்கிறார்கள். திருமணத்திற்காக அவசரப்படவில்லை. அதற்கான அழுத்தமும் எனக்கு இல்லை. சரியான நபருக்காக காத்திருக்கிறேன். அப்படி ஒருவரை சந்தித்ததால் அவர் தான் நமக்கு சரியானவர் என உணர்ந்தால் திருமணம் செய்து கொள்வேன்'' என்கிறார் ஹூமா குரேஷி.