இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி |
கண்ணன் இயக்கத்தில் சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'காசேதான் கடவுளடா'. 1972ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'காசேதான் கடவுளடா' படத்தைத்தான் தற்போது மீண்டும் ரீமேக் செய்துள்ளனர்.
இன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை காட்சிக்கு படம் வெளியாகவில்லை. 10 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பட வெளியீட்டில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. அந்த சிக்கல் தீர்ந்த பின்தான் படம் வெளியாகும் என்கிறார்கள்.
காலை காட்சிகளுக்கு அடுத்த காட்சிகளிலாவது படம் வெளியாகுமா அல்லது இன்றைய காட்சிகள் முழுவதும் ரத்தாகுமா என்பது விரைவில் தெரிய வரும். ஒரு கிளாசிக் படத்தை ரீமேக் செய்துவிட்டு அப்படத்தின் வெளியீட்டில் இப்படி தடுமாறுவது பழைய படத்தின் பெருமையைக் குலைப்பதாகவே உள்ளது.