லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் |
மாஸ்டர் படத்தைக் அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை கடந்த ஐந்தாம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது. என்றாலும் அது குறித்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அந்த பூஜையில் விஜய், அர்ஜுன், த்ரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு இந்த படத்தில் நடிப்பதாக ஏற்கனவே பல நடிகர்களின் பெயர்கள் வெளியான போதும், அப்போதெல்லாம் பிரியா ஆனந்தின் பெயர் வெளியாகவில்லை. ஆனால் இப்போது அவர் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால் அவரும் விஜய் 67 வது படத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரியா ஆனந்த் இணைந்தால் இது விஜய்யுடன் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும். தற்போது தமிழில் அந்தகன், சுமோ போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த் .