நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்தவர் அபிராமி. வானவில் படத்தில் அறிமுகமான அவர் அதன்பிறகு மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி படங்களில் நடித்தார். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான அபிராமி 10 ஆண்டுகளுக்கு பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
தற்போது மலையாள படங்களில் நடித்து வரும் அபிராமி தமிழில் மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் படங்களில் நடித்ததார். தற்போது அவர் மீண்டும் தமிழில் 'பாபா பிளாக் ஷீப்' என்ற படத்தின் மூலம் கதை நாயகி ஆகியிருக்கிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராஜ்மோகனின் இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. பள்ளிக்குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த டிராமாவாக உருவாகிறது.
‛‛இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை சொல்லும் ஒரு அழகான டிராமா. இப்படத்தில் ஒரு குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் அன்னை கதாபாத்திரம் இருந்தது. இப்பாத்திரத்திற்காக நடிகை அபிராமியை அணுகினேன், கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்து, நான் நடிக்கிறேன். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கிறது என்றார் ராஜ்மோகன்.