2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. விருது வாங்கிய பின் படக்குழுவினர் ஒவ்வொருவராக இந்தியா திரும்பினர்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் இன்று முதல் ஆரம்பமாக உள்ளது. அதற்காக நடன ஒத்திகை ஒன்று நடைபெற்று வருகிறது.
நடன இயக்குனர்கள் பிரபுதேவா, கணேஷ் ஆகியோர் அதைச் செய்து வருகிறார்கள். அதில் கலந்து கொள்ள வந்த ராம் சரண் முன் பிரபுதேவா, கணேஷ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடி ராம் சரணுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.