நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கோவில் திருவிழா மேடைகளில் ரோபோ போன்று வேடமிட்டு நடனமாடியதால் ரோபோ சங்கர் என்று புகழ்பெற்ற சங்கர். சின்னத்திரையில் புகழடைந்து அதன் பிறகு சினிமாவுக்கு வந்தவர். ஆரம்பத்தில் காமெடி வேடங்களில் நடித்தவர் அதன்பிறகு குணசித்ர வேடங்களிலும் நடித்தார். இப்போது பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர். இவரது மனைவி, மகள் கூட தற்போது நடித்து வருகிறார்கள். சமீபத்தில் வீட்டில் அபூர்வ இன கிளி வளர்த்தது தவிர ரோபோ சங்கர் மீது எந்த சர்ச்சையும் கிடையாது.
இயற்கையிலேயே கட்டுமஸ்தான உடல் அமைப்பை கொண்டவர் ரோபோ சங்கர். அண்மையில்கூட அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டிருந்தார். திடீரென தற்போது அவர் தரப்பில் இருந்து வெளியிடப்படும் படங்கள் உடல் எடை கணிசமாக குறைந்து காணப்படுகிறார். அவர் உடலுக்கு என்னாச்சு? அல்லது ஏதாவது படத்திற்காக மெலிந்து எடை குறைத்திருக்கிறாரா? என்று அவரது ரசிகர்கள் கவலையோடு கேட்டு வருகிறார்கள்.