ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
வெந்து தணிந்தது காடு படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛பத்து தல'. கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் ரீ-மேக்காக உருவாகி உள்ள இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இம்மாதம் 30ம் தேதி படம் ரிலீஸாகிறது. மார்ச் 18ல் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கிறது.
இதுஒருபுறம் இருக்க, கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கிறார் சிம்பு. இந்த படத்திற்காக சில தற்காப்பு பயிற்சிகளையும், உடல் எடையையும் பிட்டாக மாற்ற தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வந்தார் சிம்பு. தற்போது பத்து தல இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை திரும்பி உள்ளார். சிம்புவின் ஸ்டைலான புதிய தோற்றம் வைரலானது.