எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
தமிழில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்கனவே கலந்து கொண்ட கங்கனா, தற்போது மீண்டும் கிளைமேக்ஸ் காட்சியில் நடிப்பதற்காக சந்திரமுகி 2 செட்டுக்குள் வந்திருப்பதாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‛‛மீண்டும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக நான் ஒப்பனை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தேன். அது இந்த படத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது'' என்கிறார்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த ரா ரா பாடலைப் போன்று இந்த இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் உள்ளதாம். இதில் ஜோதிகா நடனமாடியதைப் போன்று கங்கனாவும் மாறுபட்ட உடல்மொழியை வெளிப்படுத்தி நடனமாடிக் கொண்டிருக்கிறார். அந்த பாடல் காட்சி தான் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.