2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. ஆனால், அது ஒரிஜனல் பாடல் அல்ல தமிழ் சினிமா பாடலிலிருந்து காப்பியடிக்கப்பட்ட பாடல் என தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை பாலிவுட் பாடல் என சொல்லிய தொகுப்பாளருக்கு கண்டனத்தைத் தெரிவித்து பல தெலுங்கு ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டன. அதே சமயம் சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தை தமிழ்ப் படம் எனக் குறிப்பிடாமல் அந்தத் தெலுங்கு ஊடகங்கள் தென்னிந்தியத் திரைப்படம் எனக் குறிப்பிட்டன. இதனால், ஆத்திரமடைந்த தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'நாட்டு நாட்டு' பாடலை டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.
விக்ரமன் இயக்கத்தில், எஸ்ஏ ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், சங்கீதா நடித்து 1996ம் ஆண்டு வெளிவந்த 'பூவே உனக்காக' படத்தில் இடம் பெற்ற 'மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…' என்ற பாடலின் காப்பி தான் 'நாட்டு நாட்டு' பாடல் என இரண்டு பாடல்களின் வீடியோவையும் பகிர்ந்து டிரோல் செய்தனர். அந்தப் பாடலுக்கு முரளி, விஜி ஆகியோர் நடனமாடி இருப்பார்கள்.
ஒரிஜனல் அல்லாத பாடலுக்கு ஒரிஜனல் பாடல் என்ற விருதை எப்படி கொடுத்தார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.