2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கார்த்திக் கொன்சால்வெஸ் இயக்கிய 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற தமிழ் டாகுமென்டரி குறும்படம், 95வது ஆஸ்கர் விருதுகளில் 'சிறந்த டாகுமென்டரி குறும்படத்திற்கான' விருதை வென்றது. அந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்ற பிறகுதான் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் அப்படம் வெளியானது. வழக்கம் போல அதையும் ஏதோ ஒரு குறும்படம் என்றுதான் சிலர் நினைத்தார்கள். ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பிறகு அந்தப் படம் பற்றிய தகவல்களும், செய்திகளும், பெண் இயக்குனர் இயக்கி, பெண் தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பது பலரிடமும் போய்ச் சென்றது.
தற்போது படத்தை அதிகம் பேர் பார்த்து வருவதாகத் தெரிகிறது. தமிழ் நடிகர் கார்த்தி கூட ஆஸ்கர் விருதுக்குப் பிறகு படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன் எனக் குறிப்பிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். “அகாடமி விருதுக்குப் பிறகு 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தைக் குழந்தைகளுடன் பார்த்தேன். நானும் ஒரு குழந்தையைப் போல மகிழ்ச்சி அடைந்தேன். இயற்கையையும், வனவிலங்குகளையும், பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். அந்த அழகான மனிதர்களுக்குப் பெருமை சேர்த்த இயக்குனர் கார்த்திகிக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.