முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் |
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, அதன் பிறகு ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி, என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாராகி உள்ள கப்ஜா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா. உபேந்திரா நாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற 17ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது ஸ்ரேயாவும் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛கப்ஜா படம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த ஷங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்த படத்தில் ரஜினியுடன் நடித்த போது சினிமா குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ரஜினிகாந்த் தான் என்றென்றும் சூப்பர் ஸ்டார். தன்னுடைய வெற்றியை எப்போதும் தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதை அவரைப் பார்த்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்'' என்றார் ஸ்ரேயா.