நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார் பி வாசு. இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே ஆகிய நடிகைகள் நடித்து வருகின்றனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு லட்சுமி மேனன் தற்போது தமிழில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது சந்திரமுகி 2வில் நடிக்கும் அவர், இந்தப்படத்தில் ஒரு மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்றும் பிளாஷ்பேக்கில் தான் அவர் நடிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் குறிப்பாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா தான் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், சந்திரமுகியாக லட்சுமி மேனன் தான் நடிக்கிறார் என்கிற தகவலும் தற்போது படக்குழுவினர் தரப்பில் இருந்து கசிந்துள்ளது. அந்தவகையில் இந்த படம் வெளியாகும்போது, முதல் பாகத்தில் ஜோதிகாவுக்கு எப்படி மிகப்பெரிய பெயர் கிடைத்ததோ அதேபோல தனக்கும் கிடைக்கும் என நம்பிக்கையாக இருக்கிறாராம் லட்சுமி மேனன்.