ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... |
2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம், அதைத் தொடர்ந்து ஜெய்பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கும் புதிய படம் என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவர் தான் பிரதான நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ரஜினிகாந்த் நடித்தாலும் அவருக்கான காட்சிகள் ரொம்பவே குறைவு தான்.. கிட்டத்தட்ட அவரது காட்சிகள் 10 நாட்களிலேயே படமாக்கி முடிக்கப்பட்டு விடும் என்றும் சொல்லப்படுகிறது. தனது மகளுக்காக தான் இந்த கெஸ்ட் ரோலில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்.
அதே சமயம் இந்த படம் ரஜினிகாந்த் படமாக எந்த இடத்திலும் புரமோட் செய்யப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ரஜினிகாந்த். ஏற்கனவே பாலச்சந்தர் மீதான அபிமானம் காரணமாக குசேலன் படத்தில் தான் நடித்தபோது, அதில் பசுபதி ஹீரோவாக இருந்தாலும் தன்னை முன்னிலைப்படுத்தி படத்தின் வியாபாரத்தை நடத்தியதால் சந்தித்த நஷ்டத்தையும் அதற்காக தான் திருப்பி கொடுத்த இழப்பீட்டையும் மனதில் வைத்து, இந்த லால் சலாம் படத்தை தன்னை முன்னிறுத்தி வியாபாரம் செய்யக்கூடாது என முன்கூட்டியே லைக்கா நிறுவனத்திடம் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்து விட்டார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டுமல்ல அதற்கு ஏற்றபடி அவர் சோலோ ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டும் தான் லால் சலாம் படத்திற்கு சம்பளமாக வாங்கியுள்ளார் என்றும் கூட சொல்லப்பட்டு வருகிறது.