மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

1990களில் பிசியாக இருந்தவர் நடிகை நக்மா. தமிழில் காதலன் படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தற்போது நடிப்பை விட்டு விலகி இருக்கும் நக்மா காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் நக்மாவுக்கு சமீபத்தில் போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த லிங்கை நடிகை நக்மா கிளிக் செய்த உடன் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் வாடிக்கையாளரின் விவரம் புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். உஷாரான நக்மா வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கவில்லை. என்றாலும் சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99 ஆயிரத்து 998 ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். குறுஞ்செய்தியை கிளிக் செய்து மோசடி பேர்வழிகளின் போனை அட்டர்ன் பண்ணினாலே அவர்களால் வங்கி கணக்க விபரங்களை பெற்று விட முடியும் என்கிறார்கள். இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்வேதா மேனன் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.