தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் |
சமூக வலைத்தளத்தின் மூலம் பிரபலமாகும் பெண்கள் திரைப்படத்துக்கு வருவது அதிகரித்துள்ளது. தற்போது முன்னணியில் உள்ள மிருனாளினி உள்பட பலர் வந்துள்ளனர். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் புவனேஸ்வரி. 'டியூப்லைட்' என்ற சேனல் மூலம் புகழ்பெற்ற புவனேஸ்வரி ஏற்கெனவே அஜித் நடித்த 'துணிவு' படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது 'கிறிஸ்டினா கதிர்வேலன்' என்ற படத்தின் மூலம் நாயகி ஆகியிருக்கிறார்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஆர்.பிரபாகரன் தயாரிக்கிறார். எஸ். ஜே. அலெக்ஸ் பாண்டியன் இயக்குகிறார். 'காலங்களில் அவள் வசந்தம்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கவுஷிக் ராமும், யுடியூபர் ரவி விஜேவும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம்புலி , குக்வித் கோமாளி புகழ், சில்மிஷம் சிவா, அஜித் யுனிக், டி எஸ் ஆர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். பிரஹத் முனியசாமியின் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் எஸ்ஜே அலெக்ஸ் பாண்டியன் கூறுகையில், "இது ஒரு ரொமான்டிக் காமெடியான, எதிர்பாராத பல திருப்பங்கள் நிறைந்த, உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். கிராமத்திலிருந்து கல்லூரி படிப்பிற்காக நகரத்திற்கு வரும் கதாநாயகன் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் முக்கிய கருவாக உள்ளது. அழுத்தமான சமூக கருத்துக்களை நகைச்சுவையுடன் கூறக்கூடிய படமாக இது இருக்கும். என்றார்.