ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் ‛ஜன கன மன' படத்தில் நடித்து வரும் டாப்சி, ஹிந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டுங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இந்த நிலையில், டாப்சியிடம் உங்களுடன் இணைந்து நடித்து வந்த ஆலியா பட், கியாரா அத்வானி, யாமி கவுதம் போன்ற பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ‛‛சினிமாவில் எனக்கென்று எந்த போட்டியும் இல்லாமல் எப்போதும் போல் எனது கேரியர் சிறப்பாக போய் கொண்டிருக்கிறது. சினிமா வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு 9 ஆண்டுகளாக நான் காதலித்து வருவதும் தெரிந்த விஷயம் தான். இப்போதும் அவரையே காதலித்து வருகிறேன். என்றாலும் திருமணம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எனது முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் டாப்சி.
நடிகை டாப்ஸி, பேட்மிட்டன் பயிற்சியாளர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.