நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் தெலுங்கு படம் கீதாஞ்சலி. இந்த படம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் லண்டனை சேர்ந்த கிரிஜா நாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது.
படத்தின் நாயகி கிரிஜா அதன்பிறகு மோகன்லாலுடன் 'வந்தனம்' என்ற மலையாளப் படத்திலும், பாலிவுட்டில் துஜே மேரி கசம் படத்திலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். போதிய வாய்ப்பு கிடைக்காதலால் லண்டனுக்கே திரும்பி விட்டார்.
லண்டனில் பிறந்து வளர்ந்தாலும் கிரிஜாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலம். 53 வயதான கிரிஜா தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். காந்தாரா பட இயக்குனர் தயாரிக்கும் 'இப்பனி தப்பித இலேயல்லி' என்ற படத்தில் நடிக்கிறார். இதனை அவரது உதவியாளர் சந்திரஜித் இயக்குகிறார்.