பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
தற்போது இந்தியா முழுக்கவே சரித்திர கதைகளுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. தமிழில்கூட பொன்னியின் செல்வன் பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வரலாறு 'மருது ஸ்கொயர்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதனை ஊமை விழிகள், உழவன் மகன் படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். தற்போது அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இதில் ஜே.எம்.பஷீர் என்பவர் முத்துராமலிங்க தேவராக நடிக்கிறார். அவரே 'மருது ஸ்கொயர்' படத்தில் பெரிய மருதுவாக நடிக்கிறார். மருது சகோதரர்களின் தலைவியாக விளங்கிய வீரமங்கை வேலு நாச்சியார் கேரக்டரில் 2019ல் மிஸ்.மெட்ராஸ் டைட்டில் வென்ற ஆயிஷா நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
பொதுவாக மருது சகோதரர்களின் சரித்திர கதையை படமாக்க பல நூறு கோடிகள் வேண்டும். சிறிய தயாரிப்பு நிறுவனத்தால் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.