'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவருக்கும், நடிகை நயன்தாரா இடையே ஒரு மறைமுக பனிப்போர் நீடித்து வருகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியின் போது, ‛‛ஒரு படத்தில் மருத்துவமனை காட்சியில் நடித்தபோது முழு மேக்கப் உடன் தலை முடிகள் கூட கலையாமல் நடிகை ஒருவர் நடித்ததார்'' என நயன்தாரா பெயரை சொல்லாமல் விமர்சித்து இருந்தார் மாளவிகா.
இதற்கு நயன்தாரா ஒரு பேட்டியில், ‛‛ரியலிஸ்டிக் படங்களுக்கும், கமர்சியல் படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் நடிப்பது கமர்சியல் படம் என்பதால்தான் அப்படி நடித்தேன்'' என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் இப்போது ஒரு பேட்டியில் ‛லேடி சூப்பர் ஸ்டார்' பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், “உண்மையாகவே எனக்கு அந்த வார்த்தையின் மீது நம்பிக்கையில்லை. பெண்களை சூப்பர் ஸ்டார் என அழைக்கலாம். லேடி சூப்பர் ஸ்டார் என்பதன் அவசியம் என்ன. தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா ஆகியோர் சூப்பர் ஸ்டார்கள் தான். அதுமாதிரி அழைத்தால் போதுமே” என்றார்.
இவரின் இந்த பேட்டி வைரலானது. நயன்தாராவை தான் மீண்டும் மாளவிகா மோகனன் சீண்டுகிறார் என ரசிகர்கள் அவரை வசைப்பாடினர். இந்தநிலையில் இதுபற்றி ஒரு பதிவு போட்டுள்ளார் மாளவிகா. அதில், ‛‛நான் எந்த ஒரு நடிகையையும் குறிப்பிட்டு அப்படி கூறவில்லை. பெண் நடிகைகள் பற்றி எனது கருத்தை தெரிவித்தேன். நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மூத்த நடிகையாக அவரது திரையுலக பயணத்தை பார்த்து வியக்கிறேன். கொஞ்சம் மக்கள் அமைதியாக இருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.