குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் ராமராஜன் உடன் ‛எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாந்தி பிரியாவிற்கு தற்போது 54 வயது. இவர் நடிகை பானுப்ரியாவின் சகோதரி. அப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பல ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி இருக்கும் சாந்தி பிரியா, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாந்திபிரியா, இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கப் போவதாக தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதை குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டை தட்டி எழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.