ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‛மாவீரன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஒரு காட்சியில் மோகோபாட் எனும் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த கேமராவானது சண்டை காட்சிகளை சிறப்பாக படம்பிடிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இந்த கேமரா இதற்கு முன்பு கமல்ஹாசனின் விக்ரம், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் துணிவு படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.