‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
சமீபத்தில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான மைக்கேல் திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி குறைந்த நேரமே வந்து செல்லும் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார். இன்னொரு பக்கம் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வரும் விஜய்சேதுபதி, முதன் முறையாக வெப் சீரிஸ் பக்கமும் களம் இறங்கி பிரபல இயக்குனர்கள் ராஜ்-டி.கே இயக்கத்தில் நடித்து வருகிறார்.
சமீப காலமாக அவரை பான் இந்தியா நடிகர் என்று திரையுலகினர் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இப்படி பான் இந்திய நடிகர் என குறிப்பிட வேண்டாம் என்றும், அந்த வார்த்தை தனக்கு மிகுந்த அழுத்தத்தை தருகிறது என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் ஒரு நடிகர், அதனால் நடிகர் என்று மட்டும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். பான் இந்திய நடிகர் என்கிற வார்த்தை எனக்கு மட்டுமல்ல, சில இயக்குனர்களுக்கு அவ்வளவு ஏன் அந்தப்பெயரில் உருவாகும் படங்களுக்கு கூட மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது. என்னை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடிக்க விரும்புகிறேன். குஜராத்தி, பெங்காலி படங்களில் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஒப்புக்கொள்வேன்” என்று கூறியுள்ளார்.