பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

யு-டியூப் சேனல் மூலம் பிரபலமான பலரும் திரைப்பட நடிகர், நடிகைகள் ஆகியிருக்கிறார்கள். மிருணாள் தாக்கூர், பிக்பாஸ் தனம், ஜி.பி.முத்து என இந்த பட்டியல் பெரியது. இப்போது அந்த வரிசையில் வருகிறார் ராஷ். நீயா நானா நிகழ்ச்சியின் போது “வாழ்க்கை நல்லா இருக்கணுனா சிரிப்புல புனிதம் இருக்க வேண்டும்” என்றார். அழகு என்பதையே அவர் புனிதம் என்று சொல்ல, 'புனிதம் கேர்ள்' என்பதே அவரது அடையாளமானது. தனித்துவமான தனது மழலை குரல் மூலம் புகழ்பெற்றார்.
தற்போது சித்தார்த் என்ற படத்தில் மூலம் சினிமாவுக்கும் வந்துவிட்டார். இப்படத்தை எபிக் தியேட்டர் சார்பாக ஹரிஹரன் தயாரிக்கிறார். படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஸோ நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக பன்றிக்கு நன்றி சொல்லி, பருந்தாகிறது ஊர் குருவி ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
நாயகியாக ராஷ் நடிக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட் ரொமாரிக். ஒளிப்பதிவு லோகநாத் சஞ்சய், இசை ஜேடி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏற்காடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
“இது ஒரு ஆக்ஷன் திரில்லர் வகையைச் சார்ந்த படம். இப்படத்தின் மையக்கதை என்னவென்றால் ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம், விழிப்புணர்வு பெறுதல், அறிதல், புரிந்து கொள்ளுதல் ஆகிய மூன்றையும் திரைக்கதையாக கொண்டு இப்படம் இருக்கும்” என்கிறார் இயக்குனர்.




