''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமானவர் டி.பி.கஜேந்திரன் (வயது68). இவர் கே. பாலசந்தர், விசு, ராம நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாபன், வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில வயது மூப்பு காரணமாக இயக்குநர் டி.பி.கஜேந்திரன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இன்று (பிப்.,5) காலை காலமானார். நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நடிகர்கள் கவுண்டமணி, ரமேஷ் கண்ணா, செந்தில் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் இரங்கல்
கஜேந்திரனின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தி: எனது கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவு வருத்தமளிக்கிறது. கலையுலகிற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர் டி.பி.கஜேந்திரன். அவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல். எனத் தெரிவித்துள்ளார். மேலும், சாலிகிராமத்தில் உள்ள கஜேந்திரனின் வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.