ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 'விஜய் 67' படத்தின் படக்குழுவினர் இன்று(ஜன., 31) காலை சென்னையிலிருந்து காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
அந்த விமானத்தில் யார் யார் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து பயணிகள் விவரத்தை தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள். அந்தப் பட்டியலில் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. காஷ்மீரில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிகிறது.
இன்று படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ளது. முதலில் சஞ்சய் தத் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அடுத்து ஒவ்வொரு அறிவிப்பாக வர உள்ளது.




