இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

யசோதா படத்திற்கு பிறகு சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் படம் பிப்ரவரி 17ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மதுபாலா, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்திலும் நடித்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டுள்ளார். இதையடுத்து தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சமந்தார். அதில் புல்-அப்ஸ் வொர்க் அவுட் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ‛‛தற்போது நான் ஆட்டோ இம்யூன் டயட்டில் இருந்து வருகிறேன். இது எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவென்றால், வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவதில் அல்ல, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான்'' என்று தெரிவித்துள்ளார் சமந்தா.