'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த வருடம் மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியானது. கடந்த வருடக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும், இந்த ஆண்டு மத்தியில் படம் வெளியாகும் என்றார்கள்.
ஆனால், இதுவரையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இதனிடையே, இந்தப் படம் குறித்து கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் புது சர்ச்சை ஒன்று பரவி வருகிறது. படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக வேறொருவர் இயக்கப் போகிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
அதே சமயம் அஜித்தின் 63வது படத்தை அட்லீ இயக்கப் போகிறார் என்றும் மற்றொரு தகவல் பரவி வருகிறது. அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களைப் பற்றி இப்படி ஒரு தகவல் பரவுவதை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகிறார்கள் என்றும் அஜித் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
அடுத்த சில தினங்களுக்குள் விக்னேஷ் சிவன் - அஜித் படம் குறித்த அப்டேட் வரலாம் என்று ஒரு தகவல். அதுவரை இன்னும் என்னென்ன பரவப் போகிறதோ தெரியவில்லை.