'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
தெலுங்கில் சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா. அவர் நடித்த 'வீரசிம்ஹா ரெட்டி' தெலுங்குப் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளிவந்து பெரும் வெற்றியைக் குவித்துள்ளது. அப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி, இசையமைப்பாளர் தமன், பாலகிருஷ்ணா, ஹனிரோஸ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சக்சஸ் மீட்டிற்குப் பிறகு படக்குழுவினர், சினிமா பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட சக்சஸ் பார்ட்டி நடந்துள்ளது. அதில் படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, கதாநாயகிகளில் ஒருவரான ஹனிரோஜ் உடன் ஷாம்பெயின் குடித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஒருவர் கையைச் சுற்றி மற்றொருவர் ஷாம்பெயின் கிளாஸ் பிடித்துள்ள அந்தப் புகைப்படம் பற்றி பலரும் பலவிதமான கமெண்ட்டுகளைக் கொடுத்துள்ளனர்.
ஹனிரோஸ் தமிழில் 'முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.