சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார். அதையடுத்து மலேசியாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை வந்திருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன்- 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து விட்டார். அவரை இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே ரசிகர்களிடம் வீடியோ மூலமாக அவர் பேசுவார். ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். விஜய் ஆண்டனி பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று சுசீந்திரன் தனது கைப்பட எழுதி அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.