ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் |
தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த வால்டேர் வீரய்யா என்ற படம் சமீபத்தில் சங்கராந்திக்கு திரைக்கு வந்துள்ளது. அதையடுத்து தமிழில் அஜித் நடித்து வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‛போலா சங்கர்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அடுத்து மீண்டும் அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க போவதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
மேலும், இதற்கு முன்பு தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தின் ரீமேக்கான ‛கைதி நம்பர் 150' என்ற படத்தில் நடித்த சிரஞ்சீவி, அதன் பிறகு மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் என்ற படத்தில் நடித்தார். நேரடி தெலுங்கு படங்களை விட இதுபோன்று வேற்று மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்கே தனக்கு வெற்றியை கொடுத்து வருவதால் இதே ரூட்டில் தொடர்ந்து பயணித்து வருகிறார் சிரஞ்சீவி.