ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
கடந்த ஆண்டு வெளியான டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுக்கு நல்ல படமாக அமைந்தது. அதன்பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து வெளிவரும் படம் இது. இதுதவிர ரெய்டு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு வெளிவருகிறது. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் விக்ரம் பிரபு கேரக்டர் பெரிய அளவில் இடம்பெறும் என்கிறார்கள். இந்த நிலையில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து அவர் நடிக்கும் படம் இறுகப்பற்று. இதனை எலி, பட்டா பட்டி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விதார்த், சானியா ஐயப்பன், அபர்ணதி, ஸ்ரீ உள்பட பலர் நடிக்கிறார்கள். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.