ரஜினி, கமல் இணையும் படம் : இன்று பிரமோ படப்பிடிப்பு | 2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் |

வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படம் வெளிநாடுகளில் லாபத்தைத் தொட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு உரிமை மொத்தமாக 14 கோடி அல்லது 15 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் அமெரிக்காவில் மட்டும் 9 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 7 கோடி வசூலையும், மலேசியாவில் 10 லட்சம் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் 8 கோடி வசூலையும், கடந்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள வினியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இங்கிலாந்தில் 2 லட்சத்து 18 ஆயிரம் பவுண்டு வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு 2 கோடியே 15 லட்ச ரூபாய்.
மேலும், இப்படம் வெளியான கனடா, மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளதாக படத்தை வெளிநாடுகளில் வெளியிட்டுள்ள லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் 'துணிவு' படம்தான் வெளிநாடுகளில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்றும் குறிப்பிட்டுள்ளது.




