ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கிறார்கள். இதுதவிர் அவர் நடித்துள்ள பதான் படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் தனது சமூகவலைதளத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்றால் அதை தன்னிடம் ஒரு முறை தருமாறும், அதை ஒரே ஒரு முறை தான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரணிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் ஷாருக்கான்.
அதையடுத்து ராம்சரண், நிச்சயமாக சார். விருது பெற்றால் அது இந்திய சினிமாவின் உடையது என்று அவருக்கு ட்விட்டரில் ஒரு பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது பெற்றுள்ளது. இந்திய திரைப்பட பாடல் ஒன்று குளோடன் குளோப் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து இந்த ஆஸ்கர் விருது போட்டியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்ற இந்திய படங்களுக்கும் பல தளங்களிலும் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.