ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட், சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. அட்டு படத்தை இயக்கிய ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். மதுபானக்கடை படத்தில் நாயகியின் தங்கையாக நடித்த மதுஸ்ரீ இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதவாது: இயக்குனர் ரத்தன் லிங்கா ஒரு குறும்படம் எடுத்த போது அதில் நான் ஒரு சின்ன பெண்ணாகத் தாவணியுடன் தோன்றியிருப்பேன். மதுபானக்கடையில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்குள் எனது எடை கூடி நான் குண்டாக இருந்தேன். அட்டு படத்தில் நடிப்பதை நான் தவற விட்டு விட்டேன். அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். இன்று கூட அதை நினைத்து வருத்தப்படுகிறேன். அதனால்தான் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.
இரண்டாவது படத்தையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதில் நடித்து இந்தப் படம் வெளிவந்து பார்த்த பிறகு தான் அந்த படத்தைப் பார்ப்பதாக இருக்கிறேன். ஆடிசனில் என்னைப் பார்த்து விட்டு எடை குறைத்து வருமாறு சொன்னார். ஒரு மாதம் நான் அவகாசம் கேட்டேன். ஏனென்றால் இது ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம், ஆனால் இயக்குநர் என்னைப் பார்த்து எதுவும் சொல்லாமல் வேறு ஒருவரைத் தேடாமல் கால அவகாசம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார்.
30 நாட்களில் நான் எடை குறைக்க முடியும் என்று நம்பினேன். அதன்படி எடை குறைந்து. அவர்கள் முன் போய் நின்றேன். என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இதில் எனது முயற்சியை விட அவர்கள் கொடுத்த நம்பிக்கை பெரிது. நம்பிக்கையால் எதையும் செய்ய முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். என்றார் மதுஸ்ரீ.